அஜித்துடன் பைக்கில் பயணிக்க மறுத்த பிரபல நடிகர்.! பின் தெறித்து ஓடிய சம்பவம்.

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து சமுத்திரகனி, இளம் நடிகர் வீரா, மலையாள நடிகை மஞ்சுவாரியர் என பிரபலங்கள் பலர் நடித்து அசத்தி வருகின்றனர்.

இது இப்படி ஓடிக்கொண்டிருக்க அஜித் பற்றிய செய்திகள் அவ்வபோது வெளி வருவது வழக்கம் அந்த வகையில் அஜித் குறித்து ஒரு பழைய செய்தி இணையதள பக்கத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் தனக்கு பிடித்ததில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கார் ரேஸ், பைக் ரேஸ் விடுவது ரொம்ப பிடித்த ஒன்று. மேலும் பல படங்களில் கூட ஓட்டி அசத்தியுள்ளார் அப்படித்தான் அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் மங்காத்தா. இந்த படத்தில் ராய்லட்சுமி, திரிஷா, ஆண்ட்ரியா, அர்ஜுனன், பிரேம்ஜி,  மகத், அஸ்வின் என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் அஜித் பைக் ஓட்டுவது போல அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிக்காக முதலில் பைக்கை ஓட்டி பார்த்தாராம். ஒரு தடவை இயக்குனர் வெங்கட்பிரபுவை உட்காரவைத்து வண்டியை ஓட்டிச் சென்றார். சுமார் 170 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்தராம்.

வெங்கட் பிரபுவை  காமெடி நடிகர் பிரேம்ஜி – யிடம் நீங்கள் ஒரு ரவுண்டு போகலாமே என அழைத்துள்ளார். காமெடி நடிகர் பிரேம்ஜி நான் வரவில்லை ஏற்கனவே வெங்கட் பிரபு பயந்து போய் தான் இருக்கிறார். நான் வரவே மாட்டேன் என கூறி அங்கிருந்து ஓடி விட்டாராம்.