அஜித்தோடு நடித்தும் சோத்துக்கே வழி இல்லையே என புலம்பும் பிரபல நடிகர்.! யார் அந்த நடிகர் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம் வீரம் இத்திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் காமெடி நடிகர் அப்புக்குட்டி.

இவர் சுசீந்திரன் அழகர் சாமியின் குதிரை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படம் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் இருந்தது.

அதன் பிறகு ஹீரோவாக பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். அந்த வகையில் இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே சினிமாவில் பிரபலமடைந்தது தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இவர் பெரும்பாலும் சுசீந்திரன் இயக்கிய பல படங்களில் நடித்து இருப்பார். இவர் பார்ப்பதற்கு குட்டையாவும் உடல் பருமனுடன் காணப்படுவதால் பார்ப்பதற்கு காமெடி நடிகருக்கு இருக்கு பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கும்.  இந்நிலையில் தான் இவருக்கு அஜித்துடன் இணைந்து விரம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் அஜித்திற்கு அப்புகுட்டியை மிகவும் பிடித்ததால் தனது அடுத்த வேதாளம் திரைப் படத்திலும் நடிக்க வைத்தார்.  அதுமட்டுமல்லாமல் அஜித் தனது சொந்த காசில் அப்பு குட்டியை வைத்து மிகவும் ஸ்டைலாக பல புகைப்படங்களை எடுத்து பட வாய்ப்பிற்காக இந்த புகைப்படங்களை கொடு என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது 15 வருடங்களாக சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தாலும் தற்போது  இருப்பதற்கு இடமில்லாமல் உண்ண உணவு இல்லாமல் அள்ளப்பட்டு வருகிறார் அப்புகுட்டி. தற்பொழுது குரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் எந்த வேலைக்கும் போக முடியாமல்  மிகவும் அவதிப்பட்டு வருகிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.