முத்து திரைப்படத்தில் ஜமீன்தார் கதாபாத்திரத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.!

0

ரஜினியின் திரைப்பயணத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த பல திரைப்படங்கள் இருக்கிறது ஆனாலும் தற்போது வரை மக்களால் ரசிக்கப்பட்டு வரும் அவரது திரைப்படங்களில் முதலாவது இடத்தை பிடித்த திரைப்படம் என்றால் அது முத்து திரைப்படம்தான்.

ஆம் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் கல்லா கட்டி விட்டது அது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து விட்டது ரஜினி ஆரம்ப காலத்தில் கஷ்ட்டப்பட்டு வரும் நேரத்தில் இந்த திரைப்படம் அவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

இந்த திரைப்படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜமீன்தார்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்பதை கேஎஸ் ரவிக்குமார் அபூர்வமாக காட்டியிருப்பார் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும்.

அதில் வயதான தோற்றத்தில் ரஜினி நடித்திருப்பார் மேலும் அந்த வயதான தோற்றத்தில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு முன்பு நடிகர் வினுசக்கரவர்த்தி அவர்களை தான் நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து இவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் படம் இன்னமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என கூறி வருகிறார்கள்.

muththu
muththu

ஒரு சில ரசிகர்கள் இவர் நிறைய திரைப் படங்களில் காமெடியனாக நடித்தாலும் தற்பொழுதும் மக்களிடையே மறையாமல் இருக்கும் நடிகர்களில் முதலாவது இடத்தை பிடித்து விட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.