“வலிமை” படத்தின் அப்டேட்டை கேட்ட பிரபல நடிகர்.! அத யாரிடம் கேட்டுள்ளார் தெரியுமா.. வைரல் செய்தி இதோ

தல அஜித் இளம் இயக்குனரான ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது ஏனென்றால் இது போன்ற பல சிறப்பான படைப்புகளை இயக்குனர் கொடுத்துள்ளதால் அதுபோன்று இருக்குமென தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித் பல கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது அதன் வெளிப்பாடாக ரசிகர்கள் பலரும் பிரதமர்  தொடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வரை வலிமை அப்டேட் கேட்டு இருந்தனர்.

தேவையில்லாத இடத்தில் அப்டேட் கேட்டதை உணர்ந்த அஜித் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் தனது ரசிகர்களுக்கு செய்தியை குறிப்பிட்டார் இதையடுத்து அவரது ரசிகர்கள் தற்போது அமைதியாக உள்ளனர் மேலும் அவர்களுக்கு அஜித்தின் மே 1 பிறந்த நாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட்டை வலிமை பட கதாநாயகியான ஹீமா ஹுரேஷியிடம் வலிமை பட அப்டேட்டை கேட்டுள்ளார். அவர் வேறுயாருமில்லை நடிகர் சித்தார்த் தான்.

இதை கண்ட தல ரசிகர்களும் தற்பொழுது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Comment