முந்தானை முடிச்சு படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்த பிரபல நடிகர்.! அத இவ்வளவு பெரிய சர்சையா மாத்திட்டாங்களே.?

0

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வசன எழுத்தாளராகவும் மற்றும் பல்வேறு விதமான திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தவர் பாக்யராஜ்.தற்போதைய காலகட்டத்தில் இவர் படங்களை பெருமளவு இயக்காமல் சினிமாவில் நடிப்பதற்கு பெருமளவு ஆர்வம் காட்டுகிறார்.

பாக்யராஜ் சினிமாவில் நடிகராக ஆகும் போது கூட இவருக்கு மிகப்பெரிய பிரபலமடையவில்லை ஆனால் இயக்குனராக அடியெடுத்து வைத்தபோது இவருக்கு பெயரும் புகழும் கொட்டின. அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போதும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கின்றன அந்த வகையில் ஒரு படம் மட்டும் சுமார் 25 வாரங்களுக்கு மேல் ஓடி அப்போது வெள்ளி விழா கொண்டாடியது.

மேலும் மிகப்பெரிய வசூலை ஈட்டி மக்களின் ஆதரவையும் பெற்றது சீரும் சிறப்புமாக ஓடிய திரைப்படம் வேறு எதுவும் அல்ல இவர் இயக்கத்தில் நடிப்பில் வெளியான “முந்தானை முடிச்சு” திரைப்படம் தான். இந்த படத்திற்காக நடிகர் பாக்கியராஜ் சிறந்த நடிகருக்கான “பிலிம்பேர் விருதை” தட்டிச் தூக்கினார்.

இந்த படம் நமக்கு பிடித்து அந்த படத்தை நானும் ஓரிரு தடவை பார்த்து இருக்கிறோம் ஆனால் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் எம் ஜி ஆர் அப்போதைய காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை எத்தனை முறை பார்த்து உள்ளார் தெரியுமா.? சுமார் 100 தடவைக்கு மேல் பார்த்து ரசித்துள்ளார். இது அப்போதைய காலகட்டத்தில் சர்ச்சையாக மாதிரியது ஒரு கட்டத்தில் இந்த படத்தின் பெயரை மாற்றியும் உள்ளன.

முந்தானை முடிச்சு என்ற பெயரை  பிரம்ம முடிச்சு மற்றும் அன்பு முடித்து மாற்றி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். எம்ஜிஆரின் வாழ்க்கையில் அதிக தடவை பார்த்த படம் இந்த படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தது ஏவிஎம் சரவணன் தான்.

இவரும் எம்ஜிஆர் மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது அதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை பல தடவைகள் பார்த்திருப்பார் என கூறப்படுகிறது.