நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சமீப காலமாக மக்களுக்கு சில கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் அங்கே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்லதொரு கருத்தை எடுத்துக் கொடுத்தது.
மேலும் இவர் செய்யவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. அதனை தொடர்ந்து இப்பொழுது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை பாண்டியராஜ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி உலக அளவில் திரையரங்கில் படம் ரிலீசாக இருக்கிறது.
சூர்யாவின் கடைசி இரண்டு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகிய நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பெரிய அளவில் படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது படக்குழு. அப்போது பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் அப்போது பேசிய நடிகர் சத்யராஜ் வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் சூர்யா.
ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்களில் பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய பேசி இருந்தார். மேலும் சூர்யாவை பற்றி புகழ்ந்து பேசினார். ஊரில் இருக்கும் பல நடிகர்களும் அடைமொழி இருக்கிறது அப்படி இருக்கையில் ஏன் சூர்யாவுக்கு மட்டும் கிடையாது.
அவருக்கும் வைக்க வேண்டும் சூர்யா ஒரு புரட்சி நாயகன் என மேடையில் பட்டம் சூட்டினார் சத்யராஜ். அவரை தொடர்ந்து படத்தின் நாயகி பிரியங்கா மோகன் பேசினார். நடிகர் சூர்யாவுடன் படத்தில் நடித்தது சிறப்பாக இருந்தது அவர் நடிப்பின் நாயகன் என கூறினார்.