ரஜினிகாந்த் தன் வாழ்க்கையில் உச்சத்தில் இருப்பதை தான் பலரும் பார்த்திருப்பீர்கள் ஆனால் அவர் வாழ்க்கையில் நடந்த சில கறுப்புப்பக்கங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது ரஜினிகாந்த் திடீரென உச்சத்தை அடைய வில்லை அவர் பல சோதனைகளை சந்தித்து தான் இந்த நிலைமையில் இருக்கிறார். ரஜினிகாந்த் பற்றிய பல தகவல்களை பிரபல நடிகர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது 1979 காலகட்டத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கூட ரஜினியின் திரைப்படத்துடன் போட்டி போட முடியாத நிலைமை ஏற்பட்டதாக கூறி உள்ளார் அவர். அன்றைய காலகட்டத்தில் உச்சத்திலிருந்த ரஜினிகாந்த் ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் கூட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் அதனால் தான் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக 120 பீடா சாப்பிடுவது வழக்கம் அந்த பீடா ஒருவிதமான போதை தரக்கூடியது என கூறியுள்ளார் அந்த சினிமா பிரபலம்.
மேலும் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பீட கடைக்கு தன்னுடைய பியட் காரில் சென்று அவரை அந்த பீடாவை வாங்கி சாப்பிடுவார் எனவும் கூறியுள்ளார். அதனால் உடல் பலவீனமாகி பல இடங்களில் தடுமாறி விழுவதும் அதிகமாக கோபம் கொள்வதும். மற்றவர்களிடம் அடிக்கடி சண்டை போடுவதும் ஆகிய செயல்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜினிகாந்தை தவறுதலாக எழுதி விட்டார் அதனால் கோபப்பட்ட ரஜினிகாந்த் காரில் மிக வேகமாக சென்று அவர் முன்பு பிரேக் அடித்தார் அதனால் ரஜினிகாந்த் மீது அந்த பத்திரிக்கையாளர் வழக்கை தொடர்ந்தார்.மேலும் ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த் நிலை தடுமாறி கீழே விழுந்த பொழுது இரண்டு மூன்று முறை அவரை தூக்கி தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நடிகை ஸ்ரீபிரியா அவருக்கு பலத்த அறிவுரை கூறி உள்ளார் ஆனால் அவை எதையும் கேட்கவில்லை ரஜினிகாந்த்.
பின்பு அவரை இயக்குனர் பாலச்சந்தர் இடம் அழைத்துச் சென்று கூறியுள்ளார் அதன்பிறகு பாலச்சந்தர் அவருக்கு அறிவுரை கூறினார் அதுமட்டுமில்லாமல் அவரை மனநல காப்பகத்தில் சேர்த்து அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் அந்த நடிகர். அதன்பிறகு ரஜினிக்கு போட்டியாக இருந்த பல நடிகர்கள் இனி ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க மாட்டார் என பேசினார்கள் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்த பொழுது அவர் நடிப்பில் வெளியாகிய தர்மயுத்தம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதன் பின்பு தொடர்ந்து பில்லா போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்தார்.
ரஜினியின் சினிமா வாழ்க்கை போய்விட்டது என துள்ளல் ஆட்டம் போட்ட பல முன்னணி நடிகர்களின் முகத்தில் கரியைப் பூசினார் ராஜினி. அதேபோல் ரஜினிகாந்த் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்தார் ஆனால் எம்ஜிஆரின் எதிர்ப்பின் காரணமாக அந்த காதலையும் கைவிட்டார் ரஜினிகாந்த் அழகான ஒரு நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அது நிறைவேறவில்லை பின்பு தான் ஏற்கனவே காதலித்து பெயர் கொண்ட ஒரு கல்லூரி பெண் அவரை பேட்டி எடுக்க வந்த பொழுது அவருடன் பழக ஆரம்பித்த ரஜினிகாந்த் பின்பு தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்டு தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரஜினிகாந்த்.