சினிமா உலகை பொறுத்தவரை புதுமுக நண்பர்கள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் ஏனென்றால் ஒரு நடிகர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போது புது புது நடிகர்கள் வருவது உண்டு அந்த காரணத்தினால் சினிமா வட்டாரத்தில் அதிக நண்பர்கள் இருப்பார்கள் அந்த வகையில்தான் ஹாலிவுட் பிரபலமான வின் டீஸல். பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவருக்கு சினிமா உலகில் பல நண்பர்கள் இருக்கின்றனர் அந்த வகையில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்த அவருடன் இணைந்து நடித்த பால் பாக்கர் மீது ரொம்ப நட்புடன் இருந்தார் அது அனைவரும் அறிந்த தான் மேலும் படத்தில் கூட பார்த்திருக்க முடியும் அந்த அளவுக்கு இருவரும் இணைந்து தான் படத்தில் நடித்திருந்தனர்.
உண்மையில் எப்படி நட்பு இருந்ததோ அதையே படத்தில் காட்டியதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன பிரபலங்களாக மாறினர். மேலும் இவர்கள் இருவரும் வரும் காட்சி அவ்வளவு பிரமாதமாக இருக்கும் இப்படி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் சீரிஸ்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாயின வெற்றி பெற்றன. இப்படி ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
இதனால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படக்குழு மற்றும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது அதிலும் குறிப்பாக மிகப் பெரிய வின் டீஸல் அளவில் பாதித்தது.தற்போது பால் வாக்கர் இல்லாவிட்டாலும் தற்போது அடுத்த பாஸ்ட் அன் பியூரியஸ் பாகங்கள் தற்போது வெளியாகி வெற்றி கண்டு வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் பால் வாக்கர் மகள் திருமண விழாவின்போது வின் டீஸல் கலந்து கொண்டார்.
பால் வாக்கர் மறைந்தாலும் நட்பு உண்மையானது என்பதை உணர்த்தும் வகையில் அவரது மகள் கல்யாணத்தை எல்லாவிதமான நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துவிட்டு இதில் கலந்து கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
