நடிகை பாவனாவை கடத்திய வழக்கில் சாட்சிகளை மறைக்க முயன்ற பிரபல நடிகர்!!.

0

actress bhavana case: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் தமிழில் 2006-இல் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி,  கூடல்நகர், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பாவனாவை மலையாள சினிமாவின் பிரபல நடிகரான திலீப் ஆள் வைத்து கடத்திச் சென்று நடந்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வழக்கு கடந்த சில வருடங்களாகவே விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் குற்றவாளி யார் என நிரூபிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது கடந்த வருடம் பாவனா அவர் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்தை கடந்தாலும் இன்னமும் அந்தக் கேஸ் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நடிகர் திலீப் இந்த கேசில் இருக்கும் முக்கிய சாட்சிகளை கலைக்க முயன்றார். அதுமட்டுமல்லாமல் சாட்சிகளை காசு கொடுத்து விலைக்கு வாங்கி விட்டதாக தெரிய வருகிறது. இதனால் இந்த விஷயம் வெளியே கசிய மேலும் நடிகர் திலீப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார்.

நடிகர் திலிப்பின் முதல் மனைவி அசுரன் திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர், இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின் அவர் மீண்டும் காவ்யா மேனன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.