கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் பெண் வேடத்தில் ஜொலித்த முன்னணி நடிகர்கள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதேனும் ஒரு சுவாரசியமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் பலர் தன்னுடைய படங்களில்  ஒரு சில காட்சிகளில்  பெண்கள் வேடத்தில் நடித்து அசத்தியவர்களை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கமல்:- நடிகர் கமலஹாசனுக்கு அன்றைய காலகட்டத்தில் இருந்து தற்போது உள்ளாவரை சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் பெண் வேடத்தில் நடித்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி இந்த திரைப்படத்தில் வயதான பெண் வேடத்தில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

kamal

விஷால்:- ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அவன் இவன் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஷால் அவர்கள் பெண் வேடத்தில் நடனம் ஆடி இருப்பார். அந்த ஒரு பாடலுக்காக பெண்கள் எப்படி நடனம் ஆடுவார்களோ அதேபோல் அவர்களுக்கு இணையாக நடனம் ஆடி தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

vishal

சிவகார்த்திகேயன்:- ரெமோ திரைப்படத்தில் யாரும் கண்டுபிடிக்காத அளவிற்கு பென் வேடத்தில் நடித்திருப்பார். அது மட்டுமில்லாமல்  படப்பிடிப்பு தளத்தில் இருந்தார்கள் கீர்த்தி சுரேஷ் விட சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் அழகாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கலாம் இதை கீர்த்தி சுரேஷ் அவர்களே கூறியிருக்கிறார்.

sivakarthikeyan

சூர்யா:- இவர் அயன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறிய பென் வேடத்தில் வந்திருப்பார். இதைப் பற்றி கூட சூர்யா அவர்கள்  ஒரு பேட்டியில் நான் ஏர்போர்ட்டில் அந்த பெண் வேடத்தில் வந்த போது என்னை பலரும் சைட் அடித்தார்கள். அது மட்டுமில்லாமல் நான் யாருக்கும் அடையாளமே தெரியாத அளவிற்கு இருந்ததாக  கூறினார்கள் என்று கூறியுள்ளார்.

surya

இது போன்ற பல நடிகர்கள் பெண்கள் இடத்தில் நடித்துள்ளனர். அவர்கள் விஜய் சேதுபதி, பிரசாந்த், சந்தானம், தனுஷ், சத்யராஜ், பரத், விக்ரம்,பிரகாஷ்ராஜ், ராகவா லாரன்ஸ், இந்த நடிகர்கள் அனைவரும் தன்னுடைய ஒரு சில காட்சியில் மட்டும் பெண்கள் வேடத்தில் நடித்து  அசத்தியுள்ளனர்.

Leave a Comment

Exit mobile version