விக்ரம் படத்தில் மிரட்டிய “பகத் பாஸிலா” இது.? பிறந்தநாள் அதுவுமாய் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

திறமை இருப்பவர்கள் எப்பொழுதுமே வெற்றியை ருசிப்பவர்கள் மேலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் அவர்களால் ஜொலிக்க முடியும் அந்த வகையில் நடிகர் பகத் பாசில்  தென்னிந்திய  சினிமா உலகில் பல மொழிகளில் தனது திறமையை காட்டி நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஆட்சி செய்து வருகிறார்.

பகத் பாசியில் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுவரை அவர் தோல்வியே கண்டது கிடையாது என சொல்லப்படுகிறது. சினிமா உலகில் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் சிறப்பான கதை அம்சம் இருந்தால் வில்லன், கெஸ்ட் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றிலும் நடித்து தனது திறமையை காட்டி உள்ளார்.

இவர் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாஸில் நடிக்க இருக்கிறார்.

மேலும் தெலுங்கில் புஷ்பா 2 மற்றும் பல்வேறு படங்களில் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பகத் பாஸில் 40 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவி உடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். பகத் பாசில்  இப்போ ஆள் பார்ப்பதற்கு ரொம்ப ஒல்லியாக இருக்கிறார். படத்திற்காக இப்படி இருக்கிறாரா அல்லது  அவருக்கு ஏதாவது ஆச்சா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகர் பகத் பாசில் தனது மனைவியுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை..

fahadh fazil
fahadh fazil
fahadh fazil
fahadh fazil

Leave a Comment