13 நாள் முடிவில் கமலின் “விக்ரம் திரைப்படம்” – தமிழகத்தில் மட்டும் வேட்டையாடிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அண்மை காலமாக சினிமா உலகில் இருக்கும் டாப் ஹீரோக்கள் பலரும் இளம் இயக்குனர்களை பெரிதும் தேர்வு செய்து படங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில்  கடந்த நான்கு வருடங்களாக உலக நாயகன் கமலஹாசன் நடிக்காமல் இருந்து வந்த நிலையில்  இளம் இயக்குனருடன் லோகேஷ் கதை ரொம்ப பிடித்துப் போகவே  விக்ரம் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை இந்த படத்தில் தேர்வு செய்தது இந்த படத்திற்கு பலமாக உள்ளது.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, ஏஜென்ட் டினா, நரேன் என பலரும் சூப்பராக நடித்து அசத்தி இருந்தனர். விக்ரம் திரைப்படம் தற்போது இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம்.

இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் படம் சுமார் 320 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளிய பாகுபலி மற்றும் கே ஜி எஃப் படங்களுக்கு நிகராக திரைப்படத்தின் வசூல் இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் 13 நாள் முடிவில் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்த்து என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் 13 நாள் முடிவில் விக்ரம் படம் சுமார் 138 கோடி அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment