அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பெரிய மவுஸ் இருக்காது.? அதிலும் இந்த வீரர்கள் ரொம்ப கஷ்டம்.?

ஐபிஎல் 15வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க இருக்கும் என தெரியவந்துள்ளது அதற்கு முன்பாக ஜனவரி மாதத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நடத்த இருக்கிறது. இதுவரை 8 அணிகள் இருந்த நிலையில் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கின்றன.

இதனால் வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக பிளேயர்கள் வருவதோடு மட்டுமல்லாமல் பல கோடி செலவு செய்ய ஒவ்வொரு அணியும் ரெடியாக இருக்கிறது. ஆனால் ஒரு சில மூத்த வீரர்கள் வாங்க எந்த ஒரு அணியும் முன் வரவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் ஒரு சில மூத்த வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படி நல்ல பார்மில் இல்லாததால் கழட்டி விடவும் ஒரு சில அணிகள் ரெடியாக இருக்கின்றன.

அந்த வகையில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கை வாங்க அதிகம் ஆர்வம் காட்டாது என தெரியவந்துள்ளது.  மேலும் அவருக்கு 40 வயதாகிவிட்டது முன்புபோல் அவர் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அவரை KKR கழட்டி வெளியிட்டு உள்ளது இதனால் இவருக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது.

இவரைத் தொடர்ந்து பல்வேறு வீரர்கள் லிஸ்டில் இருக்கின்றனர் அந்தவகையில் புஜாரா, ரஹானே, பியூஸ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ஆரோன் பின்ச்,குல்தீப் யாதவ், வருண் ஆரோன், இம்ரான் தாகிர் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அடங்குவார்கள் ஆனால் ஒரு சில வீரர்கள் மீண்டும் எடுக்கப்பட்டாலும் மிகப்பெரிய ஒரு தொகையை போக மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னை  அணி அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னாவை அதிக முயற்சித்தாலும் பெரிய தொகையை வாங்க முயற்சிக்காது என தெரியவருகிறது.

Leave a Comment