ராஜா ராணி 2 சீரியல் நடிகை வாங்கிய விலை உயர்ந்த கார்.!இதோ புதிய புகைப்படம்.

raja rani serial 2
raja rani serial 2

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மிகவும் விறுவிறுப்பாகவும் பல எதிர்பார்ப்புகளை வைத்தும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் அருமையாக அமைவதால் ரசிகர்கள் விஜய் டிவிக்கு பேராதரவை கொடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் திரைப்படங்களின் பெயர்களை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.  அந்த வகையில் ஒன்றுதான் ராஜா ராணி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவருகிறது.

எனவே இந்த சீரியலின் முதல் சீசன் முடிந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் இருவரும் முதல் சீசனின் மூலம் அறிமுகமானார்கள்.

இதனைத் தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2வில் ஆலியாவுக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நடித்த சித்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த சீசனின் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா.

இந்த சீரியலில்அர்ச்சனா கதாநாயகியை தனது மாமியாரிடம் போட்டு கொடுப்பதையே வேலையாக பார்த்து வருவார். வில்லியாக இருந்தாலும் இவரின் கொழுக்கும் அழகான உடலமைப்பு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் அர்ச்சனா Toyota கார் ஒன்றை வாங்கி உள்ளார்.  அப்பொழுது அந்தக் காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.