இமானுக்கு அதிரடியாக சவால் விட்ட முன்னாள் மனைவி.! உண்மையை போட்டு உடைத்த பிரபலம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் டி இமான். இவர் விசுவாசம், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், போன்ற பல திரைப்படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

டி இமான் அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் டி இமானின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இமானுக்கு இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் சமீபத்தில் இமானுக்கு எமிலி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் க்ரிஷ், குட்டி பத்மினி, சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பலபிரபலங்கள் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அவருடைய முன்னாள் மனைவியான மோகினி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் 12 வருடங்களாக உனக்காக வாழ்ந்த என்னை மறந்துவிட முடியுமா? உங்களைப் போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்தான் என பதிவிட்டுள்ளார். மேலும் பயில்வான் ரங்கநாதன் இமான் அவர்கள் விதவைக்கு  மறுவாழ்வு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

t iman
t iman

அதன்பிறகு டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிசார்ட் அவர்கள் சவால் விட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் தானும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு  குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் என்று மோனிகா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மோனிகா ரிச்சர்ட் இமானிட இவ்வாறு சவால் விட்டார் என்று உறுதியாக தெரியவில்லை. மேலும் பயில்வான் கூறியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment