முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மரணம் அதிர்ச்சியில் பாஜகவினர்.!

0
132

Arun Jaitley passed away : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திடீரென மரணமடைந்தார்.

அருண்ஜெட்லி 1970 ஆம் ஆண்டு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். அதேபோல் பாஜக ஆட்சி அமைத்த பொழுது மத்திய அமைச்சராக இருந்தார் அதுமட்டுமில்லாமல் நிதி அமைச்சராகவும் பதவியில் பணியாற்றியுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் 9 ம் தேதி  அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

உயிரிழந்த அருண்ஜெட்லிக்கு தற்பொழுது வயது 66 ஆகும், அவரின் மறைவுக்கு மோடி அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.