முன்னாள் காதலர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் ஒன்றாக இணைந்துள்ளனர்.! யார் தெரியுமா.?

0
bigboss ultimate
bigboss ultimate

பிரபல விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்யில் அண்மையில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் கோலாகலமாக ஆரம்பித்து வைத்துள்ளார். சினிமா துறையில் முன்னணி நடிகரான உலகநாயகன் கமலஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் திரைப்படத்தை தாண்டி  அரசியல், தொழில் நிறுவனம் போன்ற அனைத்திலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக தொடர்ந்து நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருவது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இதற்கு முன் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட சில முக்கிய பிரபலங்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதல் வார கேப்டனாக ஷாரிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஷாரிக்கும் வனிதாவிற்கும் சில வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் இருவர் தான் நிரூப் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம். இவர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் இவர்கள் இருவரும் முன்னாள் காதலர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் சென்றுள்ளதால் அங்கு இவர்களின் காதல் மீண்டும் மலருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் தற்போது இவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

niroop and abirami
niroop and abirami