வசூல் நிலவரம் எல்லாம் பொய் தான்.. உண்மையை வெளிப்படையாக சொன்ன ஹச் வினோத்

0
thunivu
thunivu

சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடித்த திரைப்படம் துணிவு. இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்

ஆரம்பத்திலிருந்து துணிவு திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது இருப்பினும் இது குறித்து படகுழு சைடுலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளி வரவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தை எதிர்த்து விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகியது  இந்த திரைப்படம் 5 நாளில் 100 கோடி தான் வசூல் செய்தது ஆனால் ஏழாவது நாள் முடிவில் 210 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. உண்மையா என தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்

அது குறித்து பல தகவல்களை சினிமா பிரபலங்கள் கொடுத்து வருகின்றனர் அண்மையில் திருப்பூர் சுப்பிரமணியன் 210 கோடி எல்லாம் வாரிசு திரைப்படம் வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என அடித்து கூறினார். அதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் இயக்குனர் ஹச் வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில்..

பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். பாக்ஸ் ஆபீஸ் கோல்மால் எல்லா படத்தின் தயாரிப்பாளர்களும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டனர் என கூறினார் அதன் வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.