இந்திய டீமில் ஒவ்வொருத்தரும் சூப்பர் ஸ்டார் தான்.! நியூசிலாந்து அணி கேப்டன் புகழாரம்

0
Cricket-player
Cricket-player

2022 ஆண்டுக்கான டி20 வேர்ல்ட் கப் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. மேலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை மிக மோசமான முறையில் விமர்சிக்க ஆரம்பித்தனர் அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் நியூசிலாந்து அனுடன் இந்திய அணி மோத உள்ளது இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா தோல்வியை கண்டு பயப்பட தேவையில்லை அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டு என்பது அவசியம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி  மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  20 ஓவர் மேட்ச் நாளை தொடங்க உள்ளது. மூன்று ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தொடர்பான குறித்து பேசி நியூசிலாந்த் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டென் போல்ட் எங்க அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மறுபடியும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நான் நம்புவதாகவும் வில்லியம்சன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான டி20 தொடர் நாளை நடக்க உள்ளதால் ரசிகல் மத்தியில் பரபரப்பு கிளம்பி வருகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி ஜெயக்குமா ஜெயிக்காத என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.