தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜீத் விஜய் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எஸ் ஜே சூர்யா அதன்பின் பெருமளவு படங்களை இயக்காமல் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அந்த படங்கள் தோல்வியை தழுவ சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறியுடன் நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தினார். தனது திறமையை வளர்த்துக்கொண்டு சில வருடங்கள் கழித்தே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் ஆம் இந்த தடவை அவர் ஹீரோ வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடித்தார்.
அந்த வகையில் நடிகர் எஸ் ஜே சூர்யா சிம்புவின் மாநாடு, ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் ஹீரோவாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் எஸ் ஜே சூர்யா இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா வெப் சீரிஸ் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றிற்காக கலந்து கொண்டார்.
அதைத் தொகுத்து வழங்க அஞ்சனா இருந்தார். அவரைப் பார்த்தவுடன் நடிகர் எஸ் ஜே சூர்யா இடையில் குறுக்கிட்டு இந்தப் பெண் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இந்த படம் வெற்றி பெறும் என கூறினார்.

நான்னும், சிவகார்த்திகேயனுடன் நடித்த டான் திரைப்படத்தை இவர் தான் தொகுத்து வழங்கினார். அந்த படம் வெற்றி பெற்றது. தற்போது இதையும் தொகுத்து வழங்குகிறார். அது வெற்றி பெறும் என கூறினார். உடனே அந்த இடத்திலேயே வெட்கப்பட்டு தலை குனிந்து சிரித்தார் தொகுப்பானி அஞ்சனா.