20 வயது ஆனாலும் முத்தன மூஞ்ச இருக்கே இவங்களை எப்படி நடிகையா போடுறது என நயன்தாராவை அசிங்கப்படுத்திய பிரபலம்.!

தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்ராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் கோலிவுட்டில் தற்பொழுது நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக நடிகை நயன்தாரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் நடிகை நயன்தாரா மலையாளத்தில் லோக்கல் தொலைக்காட்சிகளில் தான் பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிறகு மனசினகரே ஜெயராம் என்ற படத்தின் மூலம் தான் நயன்தாரா சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஐயா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதாவது ஐயா படத்தின் இயக்குனர் ஹரி இந்த படத்தின் நடிப்பதற்காக குடும்பப் பாங்கான பெண்ணை தேடி உள்ளார். அப்பொழுது நயன்தாரா நடிக்க ஆசைப்பட்டு பார்த்திபன் இயக்கிய குட்டைக்குள் மழை என்ற படத்திற்காக ஆடிஷனல் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். ஆடிஷனின் பண்ணும் பொழுது நயன்தாராவைம் பார்த்து தனது உதவியாளரிடம் வயது 20 ஆனாலும் முத்துன மூஞ்சி மாதிரி இருக்கிறது எனக்கு இந்த பொண்ணு வேண்டாம் எனவும் இளமையாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பிறகு நயன்தாரா வேறு வழி இல்லாமல் தன்னுடைய சொந்த ஊர் கேரளாவிற்கு திரும்பி உள்ளார். அப்பொழுது நயன்தாராவிடம் பார்த்திபன் உதவியாளர் முக்கியமான இயக்குனர் படத்தில் நடிக்க ஆடிஷன் நடைபெற்று வருவதாக கூற அவர் அங்கு சென்றுள்ளார் அப்படித்தான் நடிகை நயன்தாராவிற்கு ஐயா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் தாவணி பாவடை எண் மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்பை இவர் வெளிப்படுத்திய காரணத்தினால் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மேலும் இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பினை செலுத்தி தற்பொழுது கோலிவுட் சூப்பர் ஸ்டாராக தமிழ் ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment