எனக்கு வர போற கணவர் இப்படி தான் இருக்கனும் – மறைமுகமாக சொல்லும் சிம்பு பட நடிகை.! ஆமான்னு தலை ஆட்டும் ரசிகர்கள்.

0

சினிமாவுலகில் கொழுக் மொழுக் என்று இருக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் மலையாளத்தில் நடித்து வந்த மஞ்சுமா மோகனுக்கு தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதில் தனது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

முதல் படத்திலேயே குடும்ப சென்டிமென்ட், லவ், ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்ததால் நடிகை மஞ்சுமா மோகனுக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் நடித்த படங்களான சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார் மேலும் தற்பொழுது துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருவதால் சினிமா உலகில் மஞ்சிமா மோகன் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் தனது ராஜ்யத்தை நிலைநாட்டுவார் என கூறப்படுகிறது.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் சினிமா நேரம் போக ரசிகர்களை தன் பக்கம் வளைத்துப் போட சமூக வலைதளத்தை பக்கத்தையும் பெரிதாக பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் அம்மணி அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்றவற்றில் கலக்குவது வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் கூட தனது இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மஞ்சிமா மோகன் தற்போது எனக்கு எப்படிப்பட்ட கணவர் வர வேண்டும் என்பதையும் ரசிகர்களிடத்தில் கூறியுள்ளார்.

அவர் கூறியது சர்வதேச சாக்லெட் தினத்தை முன்னிட்டு மஞ்சிமா மோகன் ஒரு சாக்லேட் கேக் ரெடி செய்து இருந்தார் அப்போது அவர் இது போன்று என்னையும் பார்த்துக் கொள்பவர் தான் எனக்கு கணவராக வர வேண்டும் என கூறினார். அதற்கும் ரசிகர்கள் நீங்கள் சொல்வது தான் சரி என அதற்கும் தலை ஆட்ட தொடங்கியுள்ளனர்.

manjuma mohan
manjuma mohan