நடிகைகள் சம்பளம் கம்மியாக வாங்கினாலும் அவர்களுடைய உதவியாளர்களுக்கும், மேக்கப்மேன்களுக்கும் ஆகும் செலவு தான் அதிகமாம்.? புட்டு புட்டு உண்மையை வைத்த பிரபல தயாரிப்பாளர்.!

actresses
actresses

சினிமா உலகில் நடக்கின்ற ஒரு சில உண்மைகளை நேரடியாக மீடியோ முன்பு போட்டு உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளவர்கள் சிலர். அந்த வகையில் 90 காலகட்டங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த கே ராஜன். இவர் படங்களை விமர்சித்த தோடு புகழ்ந்து பேசுவதும் வழக்கமாக வைத்துள்ளார் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நேரிடையாக பேசும் பழக்கம் கொண்டுள்ளவர்.

கே ராஜன் என்பதால் மக்களுக்கு பிடித்த நபராக இருந்து வருகிறார். இவரை இவர் தயாரிப்பாளர் இயக்குனர், ஹீரோ ஆகியவர்களை கிழித்து எடுத்த நிலையில் தற்போது நடிகைகளைப் பற்றி தாறுமாறாக விமர்சித்து வருகிறார். அதில் அவர் கூறி உள்ளது இன்றைய நவீன சினிமா துறையில் நடிகைகள் ஒவ்வொரு படத்திற்கும் ஒப்பந்தம் ஆகும் போது அவர்கள் தனது வாங்கும் சம்பளத்தை விட அவர்கள் மேக்கப்புக்காக தான் அதிகம் செலவு செய்கிறார்கள் என்று கூறி கடுமையாக சாடியுள்ளார்.

நடிகைகளை படத்தில் கமிட் செய்யும்போது அவர்கள் செய்யும் லூட்டியை அளவே இல்லாமல் செல்கிறது ஏனென்றால் நடிக்க வர வேண்டுமென்றால் அதிக கேரவன் கேட்பதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷூட்டிங் இருந்தால் 7 உதவியாளர்கள் வேண்டும் லட்சக்கணக்கில் காசுகள் கொடுக்கவேண்டும் என கூறுகின்றனர் இதற்கு சம்மதித்தால் மட்டுமே அவர்கள் படத்தில் கமிட் ஆகின்றனர் படத்தின் பட்ஜெட் இருந்து தான் செல்கிறது.

நடிகைகள் சம்பளத்தையும் தாண்டி இதுபோன்ற செலவுகளில் காசுகள் வினாய் போகின்றன எனவும் கூறினார் ஒரு கட்டத்தில் இவர்கள் மேக்கப்புக்காக பல லட்சங்களை செலவு செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது :  ஒரு சில நடிகைகள் மேக்கப்மேன்கள் உள்ளூரில் இருப்பவர்களை அழைப்பார்கள் ஒரு சிலரோ மும்பையிலிருந்து வரவேற்பார்கள் அந்தவகையில் ஆண்ட்ரியா மும்பை மேக்கப்மேன்களை தான் வர வைப்பார் அவர்களுக்கே சுமார் 10 லட்சத்துக்கும் மேலாக செலவு

அதேபோல்தான் நயன்தாராவும் அவர் வரவழைக்கும் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் கொடுக்கப்படும் அவர் மொத்தம் ஏழு உதவியாளர்களை அழைப்பார் அப்படி என்றால் 1400000 லட்சம் இதிலேயே போய்விடும் இப்படித்தான் ஒவ்வொரு நடிகைகளும் குறி வைத்து இருக்கின்றனர் அதிலும் நடிகை திரிஷா வேற லெவல் 15 லட்சம் கேட்டு ஒரு விழாவிற்கு கலந்து கொள்ளவார்.

காஸ்ட்லியான நடிகைகளை வைத்து படங்களை எடுப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது என கே ராஜன் புலம்பினார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தின் பட்ஜெட் முதலில் 40 கோடி தான் ஆனால் படம் போக போக 60 கோடியை எட்டியது இருப்பினும் தயாரிப்பாளர் அதை ஏற்றுக்கொண்டு அதை சமீபத்தில் சிவகார்த்திகேயன் சொல்லி புகழ்ந்து தள்ளினார்.