லாக் டவுன்ல கூட ப்ளாக்ல சரக்கு வாங்கி அடிக்குற ஆளாச்சே நீ..! கிக் ஏத்தம் சந்தானத்தின் கிக் பட ட்ரைலர்..!

0
santhanam
santhanam

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சந்தானம் ஆனால் இவர் சில பல காரணத்தின் காரணமாக சில ஆண்டுகளாக தன்னுடைய காமெடி கதாபாத்திரத்தை விட்டு விட்டு ஹீரோவாக சினிமாவில் களமிறங்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது கிக் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் அவர்கள் கதாநாயக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது நடிகை ஏற்கனவே தாராள பிரபு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.  மேலும் அர்ஜுன் இசையில் உருவாகிய இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றைக் கூட நடிகர் சந்தானம் தன்னுடைய சொந்த குரலில் பாடி உள்ளார்.

மேலும் இந்த பாடல் கூட சமீபத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் காமெடி கலந்த ரொமான்ஸ் வரைபடமாக அமையும் என கூறியுள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா பிரம்மானந்தம் செந்தில் கோவை சரளா மன்சூர் அலிகான் மனோபாலா மொட்டை ராஜேந்திரன் பண்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிய நிலையில் இரண்டு நிமிட காட்சிகள் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த காட்சியை காண்பதன் காரணமாக இந்த திரைப்படம் கண்டிப்பாக சந்தானத்திற்கு ஒரு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.