கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகை மட்டும் வேண்டாம்..! பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதி..!

தமிழ் திரையுலகில் தன்னுடைய சிறந்த திறமையின் மூலம் பிரபல நடிகராக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை கவர்ந்து விட்டார். அந்தவகையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் அவருடைய கால்ஷீட் டைரி ஆனது  தற்போது நிரம்பி வழியும் அளவிற்கு  பல திரைப் படங்களுக்கு கால்ஷீட் வாங்கி வைத்து விட்டார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் மட்டும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி தற்போது வேறு மொழி சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது தெலுங்கு ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வரும் நமது நடிகர் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் மற்றொரு திரைப்படமான உப்பென்னா என்ற திரைப்படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனை மிரட்டும் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் நடிக்கும் புதிய படமொன்றில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஆனால் விஜய் சேதுபதியும் அவர் எனக்கு மகளாக நடித்துள்ளார் ஆகையால் என்னால் அவருடன் ஜோடி போட்டு நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார்.

vijay-sethupathi-4

Leave a Comment

Exit mobile version