சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஆட்டைய போட முடியலனாலும் படத்தை ஆட்டைய போடுவோம்ல.! லியோ இந்த படத்தின் காப்பி தான் விமர்சிக்கும் நொட்டிஷன்கள்…

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடல் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்தின் டைட்டில் ஒரு பிரமோ வீடியோவாக வெளியாகும் என்று ஏற்கனவே லோகேஷ் கனராஜ் அறிவித்திருந்தார் அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியான இந்த படத்தின் ப்ரோமோவில் டைட்டிலையும் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த புரோமோவில் லியோ படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படி இணையத்தில் முழுக்க முழுக்க தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் ஆகவே உலா வந்து இருக்கும் நிலையில் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை இணையத்தில் லீக் ஆகி செம வைரலாகி வருகிறது அதாவது லியோ இந்த படத்தின் காப்பி தான் என்று புகைப்படத்துடன் கண்டுபிடித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி அவர்கள் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ப்ரோமோ கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ப்ரோமோ வீடியோவையும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோவையும் இணைத்து நெட்டிசன்கள் ஜெயிலர் படத்தின் காபி தான் லியோ என்று கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ஆட்டைய போட முடியவில்லை என்றாலும் அவருடைய படத்தை ஆட்டைய போட்டு விட்டீர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

leo
leo

Leave a Comment