இப்படி இருந்தாலும் தப்பு அப்படி இருந்தாலும் தப்பு..! மனம் நொந்துபோன நடிகை ராஷ்மிகா..!

0
rashmika-mandana-09
rashmika-mandana-09

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து ஒருவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி உள்ளார்.

மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் திரையரங்கில் மாபெரும் வெற்றி நடை போட்டு வருவது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் இவ்வாறு அவர் பேசிய போது மனம் உடைந்து பேசியதாக பலரும் கூறி வருகிறார்கள்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் சில நேரங்களில் என்னுடைய உடலால் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறேன் அந்த வகையில் நான் வொர்க் அவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் அவை தவறாக கூறப்படுகிறது அதே போல ஒர்க் அவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் அவற்றை தவறாகவே ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் நான் ஓவராக வாய் பேசினால் கிரிஞ் என்ற விமர்சனம் கூறுகிறார்கள் அதேபோல நான் பேசாமல் மூஞ்சை காட்டினால் அந்த நடிகைக்கு அவ்வளவு திமிர் இருக்கிறது என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறேன் மேலும் நான் சினிமாவை விட்டு வெளியேறி விடவா இல்லை இருக்க வா என்பது எனக்கே தெரியவில்லை.

மேலும் என்னிடம் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவற்றை ஓப்பன் ஆக தெளிவாக என்னிடம் கூறி விடுங்கள் மேலும் என்னை தவறாக நினைக்காதீர்கள் உங்களுடைய வார்த்தை என்னை மனரீதியாக மிகவும் துன்புறுத்தி வருவதாக நடிகை ராஸ்மிகா மந்தனா கூறியுள்ளார்.