லேட்டாக வந்தாலும்.. செம்ம மாஸ் காட்டும் “எப்ஐஆர்” இதுவரை அள்ளிய கோடி எவ்வளவு தெரியுமா.? மிரண்ட தமிழ் சினிமா.

0
vishnu-vishal-
vishnu-vishal-

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிராமத்து மற்றும் வித்தியாசமான நிறைய படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே நல்லதொரு வெற்றியை பெற்று வருகின்றன.

கடைசியாக இவர் நடித்த ராட்சசன், கார்டன் ஆகிய திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படம் தான் FIR. இந்த திரைப்படத்தை முதலில் பல்வேறு OTT நிறுவனங்கள் கைப்பற்ற ஆசைப்பட்டன. ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் இந்த திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் வெளியீட்டு பின்புதான்.

OTT தளத்திற்கு கொடுப்பேன் என உறுதியாக சொல்லிவிட்டார் இருப்பினும் எஃப்ஐஆர் திரைப்படத்தை வாங்க பல்வேறு போட்டி நிறுவனங்களில் மோதின ஒருவழியாக அமேசான் நிறுவனம் 7 கோடிக்கு இந்த திரைப்படத்தை கைப்பற்றி உள்ளது. முதலாவதாக எப்ஐஆர் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் போலீசாக நடித்துள்ளார் மற்றபடி ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா அப்புறம் பலர் டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடிகளை அள்ளி வருகிறது.

திரையரங்கு  உரிமத்தை சேர்க்காமல் மட்டுமே சுமார் 22 கோடி சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. பிரமாண்ட ப்ரீ – ரிலீஸ் வியாபாரம் லாபம் அடைந்துள்ளது. காரணம் இந்த படத்தை ஆரம்பத்திலேயே பார்த்த பிரபலங்கள் பலரும் புகழ்ந்து பேசி உள்ளனர் அதிலும் குறிப்பாக ராட்சசன் திரைப்படத்தை விட எஃப்ஐஆர் மிரட்டும் என கூறி உள்ளதால் இந்த படத்தை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதால் லாபத்தை அள்ளி வருகிறதாம்.