அந்த வார்த்தையை இப்ப கேட்டாலும் எனக்கு பயமாயிருக்கு.. பையா படத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கார்த்தி

karthi
karthi

2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் உருவான “பருத்தி வீரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் கார்த்தி. அதன் பிறகு நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், கைதி, சர்தார், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த ஹிட்..

படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வலம் வருகிறார். இப்பொழுதும் கைவசம்  பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இப்படி திரை உலகில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்திருக்கிறார்.

அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடர்ந்து கார்த்தி தமன்னாவுடன் கைகோர்த்து “பையா” திரைப்படத்தில் நடித்து வந்த சமயம்.. அப்பொழுது கார்த்தியை பெரிய நடிகர் கிடையாது அதே சமய மக்கள் மத்தியில் பிரபலமடையும் இல்லை இதனால்  ஒரு பெண் இவரை கலாய்த்து விட்டு உள்ளார்..

பையா படத்தின் ஷூட்டிங்கில் காரை ஓட்டிக்கொண்டு வருவது போன்ற காட்சி படமாக எடுக்கப்பட்டு வந்தது அப்பொழுது அந்த பக்கமாக சென்ற ஒரு பெண் தமன்னாவை பார்த்தவுடன் கட்டிப் பிடித்து விட்டார். மேலும் மேடம் உங்களை எனக்கு தெரியும் நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என கூறி உள்ளார் உடனே நடிகை தமன்னா கார்த்தியை காட்டி இவரும் நடிகர் தான் பருத்திவீரன் படத்தில் நடித்திருக்கிறார் என கூற..

அந்தப் பெண் அப்பொழுது பார்த்தியை பார்த்து நீங்களும் அழகாக இருக்கிறீங்க சார் என கூறிவிட்டு சென்று இருக்கிறார் அதன் பிறகு  தினமும் காலையில் தமன்னா அப்படி கூப்பிட்ட தான் கார்த்தியை கலாய்ப்பாராம்.. இதனை சமிபத்திய பேட்டியில் கார்த்தி வெளிப்படையாக கூறினார் மேலும் இப்பொழுது எல்லாம் யாராவது நீங்க அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னா பயமா இருக்கு என கூறியிருக்கிறார்.

paiyaa
paiyaa