“வலிமை” படம் வெளிவருவதற்கு முன்பே NO.1 இடம் பிடித்து அசத்தல்.! எதில் தெரியுமா.? கொண்டாடும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்த இருந்தாலும் ரசிகர்கள் அஜித்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதால் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

தற்போது சிறந்த இயக்குனர் என்ற பெயரை வைத்திருக்கும் வினோத் உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் ஒருவழியாக சமீபத்தில் சூட்டிங் முடிந்தது இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலிருந்து அப்பொழுது அப்டேட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு Glimpse வீடியோ ஒன்று வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.  அந்த வீடியோவை பல பேரை இதை கண்டு களித்தயோடு அஜித் ரசிகர்கள் வர இருக்கிற பொங்கல் எங்களுடைய பொங்கல் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வெளியான காட்சிகள் அந்த glimpse நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. யூடியூபில் இதுவரை பல்வேறு விதமான glimpse வீடியோக்கள் வெளியாகி அதிக லைக்குகள் பெற்று வருகின்றன அந்த வகையில் வலிமை திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியானது இதுவே தற்போது முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

1.அஜித்தின் வலிமை – 785.3 k லைக்குகளை அள்ளி உள்ளதாம். 2. Bheemlanayak – 728k, 3. Radhe shyam – 394k, 4. BLITZ of DANIELSHEKAR – 360k, 5. Radhae shyam – 355k. தல எப்போதும் எதிலேயும் no.1 தான் என கூறி சந்தோஷ்ப்பட்டு வருகின்றனர்.