தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கில் இயக்குனரான வம்சி அவர்கள் இயக்கி வருகிறார். இந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாரிசு படத்தின் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க போகிறார் இந்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பீஸ்ட் திரைப்படத்தின் கலவையான விமர்சனத்தை பெற்று விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே வாரிசு திரைப்படம் 200 கோடி வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் பிரபல ott நிறுவனம் 50 கோடி கொடுத்து உரிமையை பெற்றுள்ளது, மேலும் சாட்டிலைட் உரிமம் 80 கோடி, ஹிந்தி டப்பிங் 25 கோடி, வெளிநாட்டு உரிமம் 50 கோடி, பாடலுக்கான உரிமம் 10 கோடி, என கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் தற்போது வாரிசு படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போ திரையரங்கில் வாரிசு திரைப்படம் வெளியானால் இன்னும் எவ்வளவு வசூல் செய்யும் என ரசிகர்கள் பூரிப்பில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் 120 கோடி சம்பளமாக வாங்கி கொண்டு வந்த நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு அதிக சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது.
மேலும் வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாகவும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வாரிசு படத்தின் மொத்த வசூல் குறித்து இந்த தகவல் வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.