105 வயதிலும் தன்னுடைய விடாமுயற்சியால் இயற்கை விவசாயம் செய்து அசத்திய மூதாட்டி.! விருது கொடுத்து கௌரவ படுத்திய கமல்ஹாசன்.! தற்போது உள்ள இளைஞர்களுக்கு முன்னெடுத்துக்காட்டு இவர்தான்.

தற்போது உள்ள புதிய தலைமுறையில் பலருக்கும் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். அப்படி ஒரு சிலர் மொபைல் போனை வைத்துக் கொண்டு தேவையில்லாமல் பொழுதை கழிக்கிறார்கள் அப்படி இணையதள செயலியில் தான் அவர்களுடைய வாழ்க்கை இருப்பது போல எண்ணுகிறார்களா என்னமோ.?

ஆனால் 105 வயது ஆகியும் ஒரு மூதாட்டி தனது சொந்த இடத்தில் இயற்க்கை விவசாயம் செய்து தற்போது தாய் பூமி என்ற விருதை பெற்றுள்ளார். இது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தாலும் ஒரு சிலருக்கு இது என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள்.

kamal

இந்நிலையில் தனது சிறு வயதிலிருந்து சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலும் புகுந்து உள்ளார். இவர் அரசியலில் புகுந்தது மட்டுமல்லாமல் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை துவங்கி அதில் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியாளராக கமல் அவர்கள் பங்கேற்றுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய கமல்ஹாசன் நூல் இழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.

kamal

என்னதான் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் எந்த ஒரு கலக்கமும் இல்லாமல் மக்களுக்கும் அரசியலிலும் தன்னுடைய பணிகளை செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் சார்பில் பல நிகழ்ச்சிகளை ஆண்டு தொரும் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு சாதனைப் பெண்களை கௌரவிக்கும் வகையில் மகளிர் சாதனையாளர் விருது வழங்க மக்கள் நீதி மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி கோவையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு உள்ளார் மேலும்  பல்வேறு துறையில் சாதனை படைத்துள்ள பெண்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளார்.

அதில் கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற 105 வயதுடைய மூதாட்டிக்கு தாய் பூமி என்கிற விருது வழங்கப்பட்டது. இந்த விருது எதற்காக என்றால் இந்த வயதிலும் இயற்கை விவசாயம் செய்து அசத்தி வரும் மூதாட்டியை கௌரவப்படுத்தும் விதமாக  இந்த விருதை வழங்கி உள்ளனர்.

kamal

Leave a Comment

Exit mobile version