எதிர்நீச்சல் திரைப்படம் பலருக்கு வாழ்க்கையை தந்துள்ளது. அதில் நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார். ஹீரோயினாக நடித்த ப்ரியா ஆனந்த் பாலிவுட் வரை சென்று அசத்தினார்.

இந்த படத்தின் மற்றொரு ஹீரோயினாக சூசா குமார் என்பவர் நடித்தார். அதன்பிறகு மா.கா.பா ஆனந்த் உடன் மாணிக் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

