குணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் டிஆர்பி – யின் நிலைமையை பார்த்தீர்களா.! டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ..

Ethirneechal Serial Trp rating : தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் கணிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் எந்தெந்த சீரியல் என்னென்ன இடத்தைப் பிடித்துள்ளது என்பதை இங்கே காணலாம்.

கடந்த சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி கயல் சீரியல் ஆக்கிரமித்துள்ளது குணசேகரன் கதாபாத்திரம் கடந்த வாரம் தொலைக்காட்சியில் இடம்பெறாததால் டிஆர்பி யில் எதிர்நீச்சல் சீரியல் பலத்த அடிவாங்கியுள்ளது ஆனாலும் சீரியல் குழு 40 சதவீத ஷேர் யாருக்கு போக இருக்கிறது என்பதை திருவிழாவில் தெரியவரும் என ஏதேதோ சுவாரசியத்தை கொண்டு வந்து பார்க்கிறார்கள் டி ஆர் பி இல் ஒன்னும் முன்னேற்றம் கிடையாது.

திடீரென்று மாறிய ஓட்டிங் லிஸ்ட்.. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?

கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்ததால் இரண்டாவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது வில்லனாக மேலும் ஒரு பிரபலத்தை களமிறக்கி உள்ளார்கள் சீரியல் குழு.

மூன்றாவது இடத்தில் சுந்தரி சீரியல் இடம் பெற்றுள்ளது சுந்தரி சீரியலில் நடித்த வரும் ஹீரோயின் சிறுவயதில் இருந்து எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என ஆசை இருந்துள்ளது. ஆனால் அவர் படித்து தற்பொழுது கலெக்டர் ஆகி மாஸ் காட்டி வருகிறார். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என முன்னுதாரணமாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

கரிகாலனை கன் பாய்ண்டில் பிடித்த கில்லி.. சக்தியை வேலைக்காரன் என்று அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி

அதேபோல் நான்காவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் இடம் பிடித்துள்ளது, அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஐந்தாவது இடத்தில் இனியா சீரியல் இடம் பிடித்துள்ளது. அதேபோல் ஆறாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், ஏழாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், எட்டாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும் ஒன்பதாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பெற்றுள்ளது அதேபோல் பத்தாவது இடத்தில் ஆகா கல்யாணம் சீரியல் டிஆர்பி யில் இடம் பிடித்துள்ளது.

Exit mobile version