ஈஸ்வரியை டிவோர்ஸ் செய்ய முடிவெடுத்த குணசேகரன்.. ஆப்பு வைத்த அப்பத்தா.! எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

ethirneechal 5
ethirneechal 5

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஜீவானந்தம் தான் முதலில் ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக இருந்த நபர் என்பது குணசேகரனுக்கு தெரிய வர இதனால் மிகவும் விறுவிறுப்பாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அதாவது குணசேகரன் எப்படியாவது அப்பத்தாவின் சொத்தை பறித்து விட வேண்டும் என முடிவெடுத்த நிலையில் இதனால் ஜனனி, ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து அப்பத்தாவிற்கு கூடுதல் பாதுகாப்பு தரும்படி கேட்பதற்காக நேரில் பார்த்துக் கொண்டனர்.

இவ்வாறு இந்த நேரத்தில் ஈஸ்வரியின் அப்பா ஜீவானந்தம் குறித்து அனைத்து உண்மையையும் குணசேகரன் மற்றும் குடும்பத்தினர்கள் முன்னிலையில் போட்டு உடைக்கிறார். எனவே இதனால் குணசேகரன் தலைகுனிந்து ஓரமாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து ஈஸ்வரி‌, ஜனனி வீட்டிற்கு வர குணசேகரன் உங்க அப்பா சரியென சொல்லி இருந்தா என்று கேட்க அதற்கு ஆமாம் கல்யாணம் பண்ணி இருப்பேன் என்று ஈஸ்வரி ஆவேசமாக பேசுகிறார். இந்த நேரத்தில் குணசேகரன் கண்டபடி ஈஸ்வரியை திட்ட இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தர்ஷன் அந்த ஆளு இனிமே உன்ன பத்தி தப்பா பேசினா அவ்வளவுதான் என்று கோபப்படுகிறார்.

தனது மகன் தனக்கு ஆதரவாக இருப்பது நினைத்து ஈஸ்வரி மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆடிட்டர்கள் உட்கார்ந்து இருப்பதை பார்த்த அப்பத்தா இவங்க எல்லாம் எதற்கு வந்திருக்காங்க எனக் கேட்கிறார் அதற்கு ரேணுகா ஈஸ்வரி அக்காவை டிவோர்ஸ் பண்ண போறாராம் என்று கூறுகிறார்.

அதற்கு முன்னாடி தீர்க்க வேண்டிய கணக்கு எல்லாம் நிறைய இருக்குப்பா என கூறிவிட்டு குலசேகரனிடம் சக்தி, ஜனனி இனிமே இந்த வீட்ல என் கூட தான் இருப்பாங்க என சொல்ல அதற்கு குணசேகரன் நாங்க வேணா மொத்தமா வெளியேறட்டுமா என்று கேட்கிறார். அப்பத்தா அது உன்னுடைய இஷ்டம் பா என்று சொல்ல ரைட்டு விடு என குணசேகரன் கூறிவிட்டு அமைதியாகி விடுகிறார்.