ஜீவானந்தத்தை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்.. குணசேகரனை கிழித்து தொங்கவிட்ட ஈஸ்வரி.!

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஈஸ்வரி குணசேகரனை கிழித்து தொங்க விட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அப்பத்தா குணசேகரனிடடம் தனது சொத்தை தர முடியாது என்று கூறிவிட்டதால் குணசேகரன் அந்த கிழவியை சமாதானப்படுத்தி சொத்தை எழுதி வாங்குற வேலையை பாருங்க என மருமகளிடம் கூறுகிறார். எனவே இதற்காக ஜீவானந்தத்தை சந்தித்து அப்பத்தாவிற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்காக ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா ஆகியோர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதனையெல்லாம் கேட்டு விட்டு ஈஸ்வரி ஜீவானந்தம் தன்னை முதலில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார் என்ற உண்மைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார். பிறகு ஈஸ்வரி, ஜனனி இருவரும் நேரில் சென்று ஜீவானந்தம் மற்றும் அவருடைய மகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு கிளம்புகின்றனர்.

இந்த சமயத்தில் ஈஸ்வரியின் தந்தை குணசேகரன் மற்றும் குடும்பத்தினர்களிடம் ஈஸ்வரி திருமணம் செய்து கொள்கிறேன் என வந்து தன்னிடம் கூறியது ஜீவானந்தம் தான் என்ற உண்மையை போட்டு உடைக்க இதனால் குணசேகரன் தலைகுனிந்து வெளியில் தனியாக அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி, ஜனனி ஜீவானந்தம் மற்றும் அவரின் குழந்தையை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்ப வர வெளியே அமர்ந்திருக்கும் குணசேகரன் அப்போ அந்த ஜீவானந்தம் உன்னிடம் சொல்லி அனுப்பி வச்சிருக்கானா.. என்று கேட்க அதற்கு கதிரும் ஆமா சொல்லி இருப்பான் என்று கூறுகிறார்.

இதனால் கோபமடைந்த ஈஸ்வரியை கதிர் மரியாதையா பேசு என்று கையை நீட்டி அடிக்க போகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் இருந்து ஈஸ்வரியின் மகனும் மகளும் வீட்டிற்கு வருகின்றனர். ஈஸ்வரி ஏதோ தப்பு செய்தது போல் அவரை குற்றம் சாட்டி பேச இங்க நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தீர்களா? என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி மனுஷனாயா நீ?  குழந்தைங்க கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க என குரலை உசத்தி வேகமாக கத்துகிறார். இதனை அடுத்து குணசேகரன் உங்க அப்பா சரின்னு சொல்லி இருந்தா.. என்று கேள்வி எழுப்ப கல்யாணம் பண்ணி இருப்பேன்.. என்று ஈஸ்வரி பதில் கூறுகிறார். இதனால் குணசேகரன் அதிர்ந்து போக எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நிற்கிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.