சொத்தை பிரித்து தர முடிவெடுத்த குணசேகரன்.. போலீசார்களுடன் என்ட்ரி கொடுக்கும் அப்பத்தா.! இந்த வார ப்ரோமோ

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: சன்டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்ள நினைத்த நபர் என்பது குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் தலை குனிந்து நிற்கிறார்.

தன்னை பற்றி குணசேகரன் இழிவாக பேசியதால் கோபமடைந்த ஈஸ்வரி ஒட்டுமொத்த குடும்பத்தினர்கள் முன்பும் குணசேகரனை அவமானப்படுத்துகிறார். ஜீவானந்தத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் ஈஸ்வரியை வெளியில் நிக்க வைத்து உங்க அப்பா ஒத்துக்கிட்டா என்ன பண்ணி இருப்ப என கேட்க ஆமாம் ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன் என கூறுகிறார்.

இதனையெல்லாம் ஈஸ்வரியின் மகள் மற்றும் மகன் கேட்டுக் கொண்டிருக்க குழந்தைகள் முன்னாடி என்ன பேசுற நீ எல்லாம் மனுஷனே இல்லையா எனக் கூறுகிறார். இவ்வாறு குணசேகரன் ஈஸ்வரியை கேவலமாக பேச கோபமாக ஈஸ்வரி பேசியிருந்தாலும் வீட்டிற்குள் சென்றவுடன் அழுகிறார்.

இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரியின் மகன் அந்த ஆளு இனிமே உன்ன பத்தி தப்பா பேசினாரு வைய என்று தன் பையன் ஆவேசமாக பேச ஈஸ்வரி மகிழ்ச்சி அடைகிறார். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஆடிட்டரை வரவழைத்து குடும்பத்தினர்களையும் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

உங்கள எல்லாரையும் வச்சி தான் இன்னைக்கு ஒரு முடிவு கட்ட போறேன் என்று சொல்ல அதற்கு ரேணுகா அதுக்கு நீங்க கோர்ட்டுக்குல போகணும் என கேட்கிறார். உடனே ஈஸ்வரி கல்யாணம் பண்ணி வந்து வீட்டில் அடச்சு போட்டுட்டு இப்ப அதை சரி கட்ட பணம் தரீங்களா என கேட்கிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது அப்பத்தா போலீசார்களுடன் என்ட்ரி கொடுத்து எஸ் கியூஸ் மீ என கூப்பிட அனைவரும் முழிக்கின்றனர்.