சொத்துக்கு ஆசைப்பட்டு குணசேகரனை போட்டு தள்ளினாரா கதிர்? பூகம்பத்தை கிளப்பும் ஜனனி..

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது ஆதி குணசேகரன் காணாமல் போன காரணத்தினால் ஒட்டுமொத்த குடும்பமும் கதி கலங்கி நிற்கின்றனர். எனவே இதனால் குடும்பத்தில் பெரிய பூகம்பமே வெடித்து வருகிறது.

ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து பேசி வந்ததால் இது குறித்து வீட்டிற்கு தெரிய வர கதிர் சண்டை போடுகிறார். எனவே பதிலுக்கு ஈஸ்வரியும் சண்டை போட குடும்பமே இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டதால் கடுப்பான குணசேகரன் லெட்டரை எழுதி வைத்துவிட்டு கிளம்பியுள்ளார்.

குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவர் மரணமடைந்ததை அடுத்து விரைவில் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு புதிய நடிகர் அறிமுகமாக இருக்கிறார். ஆதி குணசேகரனின் அண்ணனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது விரைவில் இது குறித்த எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குணசேகரனை தேடி சென்ற கதிர், ஞானத்திற்கு அவருடைய செப்பல் சாமியார் மூலம் கிடைக்க விரைவில் குணசேகரன் கிடைத்து விடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்த வருகின்றனர். இந்த நேரத்தில் ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாக கூறுகிறார். உடனே ஈஸ்வரியும் குணசேகரன் வந்துவிடுவாரா அவர் என்னால்தான் காணாமல் போனதாக இங்கு இருப்பவர்கள் எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று கூறுகிறார்.

மேலும் கதிர் தொடர்ந்து மருமகள்களிடம் சண்டை போட்டு வரும் நிலையில் இந்த செருப்பு கிடைத்த இடத்தை சொல்லு நான் போய் அவரை தேடிக்கிட்டு வரேன் என சொல்லி வருகிறார் ஈஸ்வரி. இவ்வாறு தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில்  அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஜனனி செருப்பு கிடைச்சதுன்னு சொன்னது எல்லாம் பொய் தான் எனக் கூற அதற்கு விசாலாட்சி என்னடி சொல்ற என்று கேட்கிறார்.

சொத்துக்கு ஆசைப்பட்டு இந்த கதிர் அவங்க அண்ணனை ஏதோ பண்ணிட்டாருனு சொல்கிறேன் என சொல்ல கதிர் அதிர்ச்சடைகிறார். உடனே விசாலாட்சி சக்தி என்னடா இவ சொல்றா ஒண்ணுமே சரியில்லடா என பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஈஸ்வரி கதிரின் சட்டையை பிடித்து அவர பாத்த ஊர சொல்லு நான் போய் கூட்டிட்டு வரேன் என்று கேட்க அதற்கு விசாலாட்சி இங்க பேசினது பத்தாதுன்னு அங்க போய் பேசி எங்கையாவது அனுப்பனும்னு பாக்கறியா எனக் கேட்க இதோட ப்ரோமோ நிறைவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்