G.Marimuthu : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து தமிழ் திரைப்படங்கள் சிலவற்றை இயக்க இருக்கும் நிலையில் அது குறித்து பார்க்கலாம். மாரிமுத்துவிற்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசையாம் ஆனால் வீட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால் 1990ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து விட்டாராம்.
இதனை அடுத்து ராஜ்கரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் அரண்மனைக்கிளி ,எல்லாமே என் ராசாதான் போன்ற திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய இருந்துள்ளார். அதன் பிறகு மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா போன்றவர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்துவிற்கு அவருடைய இயக்குனராக வேண்டும் என்ற கனவும் 2008 ஆம் ஆண்டு நினைவாகியுள்ளது.
அப்படி தமிழில் முதன் முதலில் கண்ணும் கண்ணும் என்ற படத்தினை இயக்கிய அந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக பிரசன்னா நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் செம ஹிட் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விமலை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.
இதில் பிரசன்னா, ஓவியா, சூரி, விமல் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் தோல்வினை பெற்றதால் இயக்குவதையும் விட்டுவிட்டு நடிக்க தொடங்கி இருக்கிறார் மாரிமுத்து. அப்படி ஜீவா, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்திருந்தும் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக தற்பொழுது இவருக்கென ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு இருந்து வருகிறது. அப்படி தற்பொழுது ரஜினியின் ஜெயிலர், சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.