சீரியல்ல தான் உங்க அலப்பறை தாங்க முடியல இப்ப இந்தப் பக்கமும்மா.. அதுக்குன்னு பாம்பு டான்ஸ் வேறயா..

Ethirneechal serial Actress: எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனி பாம்பு டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் மதுமிதா மற்றும் இவருக்கு ஜோடியாக சக்தி என்ற கேரக்டரில் சபரி பிரசாத் நடித்து வருகிறார்.

நான்கு அண்ணன் தம்பிகள் படித்த மருமகளை திருமணம் செய்து கொண்டு வீட்டில் அடிமையாக நடத்தி வருகின்றனர். இதில் தற்போது தான் கடைசி தம்பி சக்தி திருந்தி தனது மனைவி ஜனனிக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இருவரும் இணைந்து புதிய பிசினஸ் தொடங்கி இருக்கும் நிலையில் குணசேகரன் இவர்களுக்கு எதிராக பல வேலைகளை பார்த்து வருகிறார்.

இந்த வாரம் முழுவதும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. சல்மான்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

இவ்வாறு ஆணாதிக்கத்தை உடைத்து முன்னேற வேண்டும் என பெண்களுக்கு ஆதரவாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ஏராளமான இல்லத்தரசிகளை கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் பல சுவாரசியமான திருப்பங்களும் நிலவி வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் குணசேகரன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். தற்பொழுது இவருடைய கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் ஆனால் மாரிமுத்து அளவிற்கு இல்லாத காரணத்தினால் சமீப காலங்களாக ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலை வெறுத்து வருகின்றனர்.

மீனாவை வேலைக்காரியை விட கேவலமாக நடத்தும் விஜயா.. முத்து செய்த தரமான சம்பவம்.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

இதனை அடுத்து ஜனனி – சக்தி ஜோடிக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இருவரும் பாம்பு டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை நமித்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

Exit mobile version