பொதுவாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக் கொள்வதற்காக புதிய புதிய சீரியல்கள் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கள் என ஒலிபரப்பி வருகிறார்கள் . அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சமீப காலமாக பலரும் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக இருப்பது எதிர்நீச்சல் இந்த சீரியலில் மக்களுக்கு கொஞ்ச நாட்களாகவே அதிக ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.
ஆனால் சில காலமாக எதிர்நீச்சல் சீரியலில் சுவாரஸ்யம் குறைந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் பார்வையாளர்கள் இந்த சீரியலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் சீரியலில் சுவாரசியம் குறைவதற்கு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமாக மக்களிடம் ஈசியாக ரீச் ஆகும் வகையில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் அனைவரும் மிஞ்சிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கேரக்டர் தான் குணசேகரன் இந்த சீரியலின் தூண் என்றே கூறலாம். என்னதான் இவரின் கதாபாத்திரம் நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள் இன்னும் சொல்லப்போனால் இவருக்காக தான் எதிர்நீச்சல் சீரியலையே மக்கள் பார்க்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.
ஆனால் சமீப காலமாக குணசேகரனை எதிர்நீச்சல் சீரியலில் அடிக்கடி பார்க்க முடியவில்லை அதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு சம்பளம் போதாது என ஏதோ பிரச்சினை நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. குணசேகரன் தனக்கு இருக்கும் மார்க்கெட்டை தெரிந்து கொண்டு கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமாக வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளாராம் ஆனால் சீரியல் குழுவிடமிருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இதுவரை வராததால் அடிக்கடி சூட்டிங் வராமல் போய்விடுகிறார்.
விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு குணசேகரன் மீண்டும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் குணசேகரன் டிமாண்ட் அனைவருக்கும் தெரியும் குணசேகரன் இல்லை என்றால் இந்த சீரியலை பார்ப்பது வேஸ்ட் என்று நிலைமை ஆகிவிடும் அதனால் குணசேகரன் எதிர்பார்த்த சம்பளத்தை சீரியல் குழு கொடுத்து விடும் எனவும் மறுபடியும் குணசேகரன் எதிர்நீச்சல் சீரியலில் மிரட்டுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் எபிசோடுகளில் குணசேகரனை அடிக்கடி பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான் சீரியலில் தான் குணசேகரன் பணம் பணம் என இருக்கிறார் என்று பார்த்தால் நிஜத்தில் கூட சம்பளம் அதிகமாக கேட்டு பிரச்சினை செய்து கொண்டிருப்பது நிஜமாகவே இவரது கேரக்டர் இதுதானா என கேட்கத் தோணுகிறது.