எதிர்நீச்சல் சீரியலில் வெள்ளை சொக்காவுடன் களமிறங்கிய வேல ராமமூர்த்தி.! பேசிய வசனம் இதுதான் வைரலாகும் வீடியோ.!

ethirneechal october 5 promo
ethirneechal october 5 promo

Ethirneechal promo October 5 : எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது அது மட்டுமில்லாமல் குணசேகரன் இல்லாததால் டல் அடித்த சீரியலை தூக்கி நிறுத்துவதற்காகவே அடுத்த குணசேகரனாக வேல ராமமூர்த்தியை களமிறக்கி உள்ளார்கள்.

ஏற்கனவே நேற்று போலீஸ் மற்றும் பலரும் கதிர் ஞானத்தை அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது திடீரென கூட்டத்திற்குள் வந்து குணசேகரன் வேலராமமூர்த்தி என்ட்ரி கொடுக்கிறார் இதனால் கதிர் ஞானம் இருவரும் குணசேகரனை பார்த்தவுடன் ஓடி வருகிறார்கள்.

Ethirneechal : என்னாது இந்த குட்டி குழந்தைதான் எதிர்நீச்சல் பிரபலமா.! படத்திலும் நடித்துள்ளாரா.! எந்தெந்த திரைப்படம் தெரியுமா.?

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முதன்முதலாக வேல ராமமூர்த்தியின் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்பொழுது ஜனனி குனசகரனை பார்த்து பேசுகிறார்,

அடுத்தவங்கள பத்தி நீங்க கவலைப்படுவதில்லை எல்லாமே உங்களுக்கு நடக்கணும் நீங்க என்னைக்கு தான் மாற போறீங்களோ என ஜனனி குணசேகரனை பார்த்து கூறுகிறார் . அதேபோல் விஷாலாட்சி மூத்தவன் வந்துருவான் அதுக்குள்ள அலங்காரம் பண்ணிட்டு கீழ வாங்க என வீட்டு பெண்களிடம் கூற அதற்கு வீட்டு பெண்கள் எங்கல என்ன பொண்ணா பாக்க வர்றாரு என நக்கலாக பதில் சொல்கிறார்கள்.

குணசேகரன் வராத காரணத்தினால் ஞானத்தையும் கதிரையும் போலீசில் பிடித்துக் கொடுத்த சக்தி.. எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

காரில் குணசேகரன் கதிர் ஞான மூன்று பேரும் வந்து கொண்டிருக்கிறார்கள் பின்னாடியே சக்தி ஜனனி இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது கதிர் நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா என குணசேகரனாக நடிக்கும்  வேல ராமமூர்த்தி இடம் கூறுகிறார். உடனே வேல ராமமூர்த்தி என்னது என கேட்கிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.