Ethirneechal next gunasekaran : சன் தொலைக்காட்சி சீரியலில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து தான் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதுமட்டுமில்லாமல் இவர் பேசும் தமிழ் இன்று சமூக வலைதளத்தில் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தனது உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து ஹாஸ்பிடலுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார் அப்பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிர் இழந்துள்ளார் இவரின் பிரிவு ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்ததாக குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது.
அப்படி இருக்கும் நிலையில் புதிதாக எதிர்நீச்சல் சீரியல் குழுவோடு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் இவர்தான் என பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அடுத்த குணசேகரன் இவர்தான் என பல நடிகர்கள் லிஸ்ட் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் பல நடிகர்களிடம் சீரியல் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது மாரிமுத்து சாயலில் இருக்கும் வேலா ராமமூர்த்தியை நடிக்க வைக்க முதலில் சீரியல் குழு அனுப்பியுள்ளது ஆனால் ராமமூர்த்தி படங்களில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் அது குறித்து அவர் பேட்டிலேயே கூறிவிட்டார்.
ஆனாலும் வேலராமமூர்த்தி இப்பொழுது என்னால் கூற முடியாது 20 நாள் சூட்டிங் இருக்கிறது அது முடிந்தவுடன் தான் எதுவாக இருந்தாலும் கூறலாம் என கூறி இருக்கிறார் அவர்களைத் தொடர்ந்து இளவரசு, நடிகர் பசுபதி நடிகர் ஆனந்தராஜ், ராதாரவி என பல பிரபலங்களுக்கு மாரிமுத்து கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அடி போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாரிமுத்து கதாபாத்திரம் ஏற்கனவே நடித்ததை வைத்து சீரியல் குழு காட்சிகளை அமைத்து வருகிறார்கள் தற்பொழுது அப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள் அப்பொழுது குணசேகரன் சாயலில் அவர்களுடன் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார் அவர் யார் என்று பலரும் தேடிய பொழுது அவர் ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம் லிமிடெட் என்ற திரைப்பட நிறுவனத்தை வைத்திருக்கிறார்.
இவர் காதலா காதலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு 14 திரைப்படங்களை தயாரித்து உள்ளார் அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்கு உதவி தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தெனாலி, படையப்பா ஆகிய திரைப்படங்களில் தான் உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன், ஜனனி, நந்தினி, ரேணுகா என ஆகியோர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்து தான் ரசிகர்கள் அடுத்த குணசேகரன் என பலரும் குழம்பி போய் இருக்கிறார்கள்.