படுத்த படுக்கையாக கிடக்கும் குணசேகரன்.! டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்.! ஜீவானந்தத்திடம் சொத்தை வாங்கப் போகும் மருமகள்கள்.?

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் ஜூலை 27 க்கான ப்ரமோ வீடியோ வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நாளும் அதிரடியான திருப்பங்களுடன் கதை நகர்வு போய்க்கொண்டிருக்கிறது ஏற்கனவே ஜீவானந்தம் பட்ட மாலின் 40 சதவீத சொத்தை கைப்பற்றி விட்டார். இதை தெரிந்து கொண்ட ஜனனி மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. அதே நேரத்தில் ஜீவானந்தம் குணசேகரன் இடம் துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பயந்து போன குணசேகரன் கனவில் எழுந்து கத்துகிறார்.

அதேபோல் ஜனனியை வைத்து மீண்டும் தன்னிடம் இருந்து சென்ற சொத்தை மீட்டே தீர்வேன் என குணசேகரன் ஒரு முடிவில் இருக்கிறார் அதனால் தான் இப்படி நடிக்கிறார் என கூறப்படுகிறது தன்னுடைய வீட்டு பெண்களை வைத்து தனக்கு ஆதரவாக பேசி ஜீவானந்தத்திடம் சண்டை போட்டு சொத்தை மீட்டு விட வேண்டும் என முடிவில் இருக்கிறார் குணசேகரன்.

ஆனால் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் வந்து இந்த 40% தான் வீடும் இருக்கிறது என கூற அதனைக் கேட்டு குணசேகரன் நெஞ்சுவலியா மயங்கி விழுகிறார் உடனே அவரை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அப்பொழுது வெளியே நின்று கொண்டிருக்கும் மருமகள்கள் நாம் போய் உருண்டு பிரண்டு ஜீவானந்தத்திடம்  சொத்தை வாங்கிக் கொண்டு வந்தால் தான் இவர் எந்திரிப்பார் போல என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு ஜனனி ஆமாக்கா அதைத்தான் செய்யணும் என சொல்ல ஈஸ்வரியும் வா ஜனனி போகலாம் என கிளம்புகிறார்கள். அந்த பக்கம் கதிரிடம் கரிகாலன் மாமா நான் வேணும்னா ஐஸ் பெட்டிக்கு சொல்லிடவா என கேட்க கதிர் எட்டி  மிதிச்சிருவேன் பாத்துக்கோ என காலை தூக்குகிறார்.

இப்படியே சத்தம் போட்டால் ஹாஸ்பிடல்ல பாதி பேரு செத்துருவாங்க என சொல்ல அப்பொழுது டாக்டர் வந்து குணசேகரனின் ரிப்போர்ட்டை பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று காணலாம்.

Leave a Comment

Exit mobile version