ஆடிட்டர் சொன்ன ஒரு வார்த்தை.. நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்த குணசேகரன்.! பதப்பதைக்க வைக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ.!

Ethirneechal Promo : எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசொடேல்  தூங்கிக் கொண்டிருந்த குணசேகரன் திடீரென கனவு காணுகிறார் அப்பொழுது ஜீவானந்தம் துப்பாக்கியால் தன்னை சுட்டது போல் கனவு கண்டு அலறி அடித்துக் கொண்டு எழுந்து ஆர்ப்பாட்டம் செய்து அங்கிருந்த அனைவரையும் பாடாய் படித்தி எடுத்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் குணசேகரன் இனி நான் தூங்க மாட்டேன் தூங்கினால் துப்பாக்கி எடுத்து சுட்டுடுவான் ஜீவானந்தம் என குழந்தை போல் புலம்பி கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கம் நான் குணசேகரனுக்கு மட்டும் பாடம் புகட்ட போவதில்லை அந்த ஜீவானந்தத்திற்கும் தான் பெண்கள் என்றால் யார் என காட்டப் போகிறேன் என சபதம் போடுகிறார் அதுமட்டுமில்லாமல் பெண்களால் எதுவும் செய்ய முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் ஜீவானந்தம் மற்றும் குணசேகரன் இருவருக்கும் பெண்களை இலக்கணமாக பார்க்கும் பலருக்கும் ஒரு முடிவு கட்டப் போகிறேன் என கூறி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் என சபதம் போடுகிறார் ஜனனி.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு பிரமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஆடிட்டர் வீட்டிற்கு வந்து நிற்கிறார் அப்பொழுது என்ன சார் என்ன பிரச்சனை அடுத்த லிஸ்டில் என்னத்தை சேர்த்து இருக்கிறான் உயிர் போகிறது சார் சொல்லுங்க என கேட்கிறார்.

உடனே ஆடிட்டர் ஏதோ ஒன்று கூற அலரி அடித்துக் கொண்டு குணசேகரன் நெஞ்சு வலியால் துடி துடித்து விழுகிறார் குணசேகரனை பார்த்து வீட்டில் உள்ளார்கள் அனைவரும் பதறிப் போய் குணசேகரனை தூக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள் ஆனால் கதிர் ஓடி வந்து யாரும் என் பக்கத்திலேயே வரக்கூடாது என குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி சென்று போகிறார்.

கதிர் ஹாஸ்பிடலுக்கு குணசேகரனை தூக்கி சென்று போகிறார் இந்த நிலையில் இன்றைய  எபிசோட் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்பதற்கு அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள் குணசேகரன் போடும் இந்த நாடகம் சொத்துக்காகவா அல்லது வீட்டுப் பெண்களை ஏமாற்றுவதற்காக வா என பலருக்கும் கேள்வி எழும்பியுள்ளது. அது மட்டும் இல்லாமல் குணசேகரன் கடைசி எபிசோடில் ஒப்பாரி பாடல் வைத்து அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment