சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் தொடர்ந்து சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் குணசகரன் தான் நினைத்தது போலவே ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
எனவே தான் ஜெயித்து விட்டதாக மிதப்பில் இருந்து வரும் நிலையில் ஜனனி சக்தியை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார். எனவே மற்ற மருமகள்களும் நாங்களும் கிளம்புகிறோம் எனக் கூறிவிட்டு இவர்களுடன் கிளம்புகிறார்கள். எனவே நடு ரோட்டில் நின்று கொண்டு ஜனனி அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்து யோசித்து வரும் நிலையில் சக்தி கவலைப்படாத நீ ஜெயிக்கணும் உனக்கு பக்க பலமாக நான் இருப்பேன் என ஆதரவாக பேசுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்களை கிளப்பியவுடன் குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்தை அமுக்க ஆடிட்டரை வீட்டை இருக்கு அழைத்திருக்கிறார். அவர் உங்க மருமகள்களுக்கும் பட்டமாவுக்கும் ஏதோ இருக்கிறது எனவே அவர்களை கவனியுங்கள் முக்கியமாக ஜனனியை வாட்ச் பண்ணுமாறு சொல்ல குணசேகரன் இப்பதானே அவங்கள வீட்டை விட்டு துரத்தினேன் எனக் கூற அதற்கு ஆடிட்டர் ஏன் சார் இப்படி பண்ணுனீங்க உடனே அழைச்சிட்டு வாங்க என கூற குணசேகரன் உடனே கூப்பிட்டால் நல்லா இருக்காது கொஞ்ச நாள் போகட்டும் என கூறுகிறார்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் விசாலாட்சி, ஜனனி, ரேணுகா என அனைவரும் ஆதிரையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என கவலையில் இருக்க மறுபுறம் ஆதிரை தனது வாழ்க்கை இப்படி நாசமா போயிடுச்சு என வருத்தத்தில் விஷத்தை குடிக்க இருக்கிறார். இவ்வாறு விஷத்தை குடிக்க இதற்கு மேல் என்ன நடக்கும் என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.