சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் ஆப்பு வைக்கும் வகையில் அப்பத்தா சரியான சம்பவம் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குணசேகரன் தான் நினைத்தபடி ஆதிரையின் திருமணம் நடந்து விட்டது என மிதப்பில் இருந்து வருகிறார்.
அதாவது குணசேகரன் ஜனனியை வீட்டை விட்டு அனுப்பியதால் மற்ற மருமகள்களும் நாங்களும் போகிறோம் எனக் குறிப்பிட்டு ஜனனியுடன் சென்று இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களை அனுப்பிவிட்டு குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட முழு வீச்சியில் இறங்கி உள்ளார்.
எனவே இதற்காக ஆடிட்டர் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அவர் குணசேகரனிடம் அப்பத்தா சொத்துக்கும் உங்க மருமகள்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது எனவே அனைவரையும் உங்கள் கண் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள் அதிலும் முக்கியமாக ஜனனி மிகவும் டேஞ்சரான மருமகள் எனவே சக்தி மற்றும் ஜனனியை உங்களுடைய கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்.
எனவே இதற்கு குணசேகரன் இப்பதான் அவர்களை அடித்து துரத்தினேன் மறுபடியும் அவங்க தான் வேணும் என்று குண்டை தூக்கி போடுறீங்க என்று கேட்கிறார். பெரிய தப்பு பண்ணிட்டீங்களே சார் உடனே அவர்களை போன் பண்ணி வீட்டுக்கு கூப்பிடுங்க என்று சொல்ல அதற்கு குணசேகரன் உடனே கூப்பிட்டால் நல்லா இருக்காது நான் அப்புறமாக கூப்பிடுகிறேன் என்று கூறுகிறார்.
எப்படியா இருந்தாலும் ஜனனி மிகவும் திமிராக இருப்பதனால் கூப்பிட்டால் வரமாட்டாள் என குணசேகரனுக்கு தெரியும் எனவே கை காலில் விழுந்தாச்சம் வீட்டிற்கு அழைத்து வர தயங்காமல் இருப்பார். இவ்வாறு ஜனனி மட்டுமல்லாமல் இவர்களுடன் இணைந்து நந்தினி மற்றும் ரேணுகா இவர்களும் தைரியமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள் எனவே இந்த சொத்து பிரச்சனையில் குணசேகரனை கிழித்து தொங்கவிட இருக்கிறார்கள்.
இவ்வாறு ஜனனி மற்றும் சக்தியை நடுரோட்டில் நின்று என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது சக்தி உன்னால முடியும் நீ ஜெயிக்கணும் அதற்கு பக்கபலமாக உன்னுடன் துணையாக நான் இருப்பேன் என மிகவும் தைரியமாக பேசுகிறார். இவ்வாறு குலசேகரன் எப்படி ஜனனி மற்றும் மற்ற மகள்களை வீட்டிற்கு அழைக்கப் போகிறார் என்பதனை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.