எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிக்கும் ஈஸ்வரியா இது.! கிளாமரில் இளம் நடிகைகளையே ஓரங்கட்டுவார் போல..

0
kunasekaran
kunasekaran

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று, என்னதான் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடித்து வரும் கனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக பார்க்கப்படுவது சன் தொலைக்காட்சி இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலை காண இல்லத்தரசிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் சமீப காலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மிகவும் விறுவிறுப்பான கதை களத்துடன் வேற லெவலில் போய்க் கொண்டிருக்கிறது பொதுவாக இந்த சீரியலில் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண்களை ஆட்டி படைக்கும் கேரக்டரில் நடித்து வருபவர் குணசேகரன் இவர் போடும் சதித்திட்டங்களை ஜனனி உடைத்து குணசேகரனை விழித்துவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குணசேகரனின் மனைவியாக நடித்து வருபவர் ஈஸ்வரி என்கின்ற கனிகா மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறார் நடிகை கனிகா தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நாயகியாகவும் துணை கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார் அப்படி இருக்கும் நிலையில் கனிகா கருப்பு நிற அழகான ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kanikha
kanikha

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு 40 வயது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kanikha
kanikha