சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த சீரியலில் இருந்து தற்போது பிரபலம் ஒருவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தான் விரும்பிய படித்த பெண் தன்னை படிக்காத முட்டாள் என்ற காரணத்தினால் திருமணம் செய்ய மறுத்த நிலையில் படித்த பெண்களை தனக்கும் தனது தம்பிகளுக்கும் திருமணம் செய்து வைத்து வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக நடத்தி வரும் குணசேகரனை எதிர்த்து போராடுகிறார்கள்.
அதாவது குணசேகரன் தனது தம்பிகளுக்கு படித்த பெண்களை திருமணம் செய்து வைத்திருக்கும் நிலையில் அனைவரும் வீட்டில் வேலை செய்யும் மிஷின்னாக இருந்து வருகிறார்கள். எனவே கடைசி மருமகள் ஜனனியின் உதவியுடன் அனைவரும் தங்களை அடக்க நினைக்கும் கணவர்களை பழிக்கு பழி வாங்க இருக்கிறார்கள்.
இவ்வாறு பெண்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் யாருக்கும் அடிமை கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் இந்த சீரியல் அமைந்திருப்பதனால் ஏராளமான ஆண்கள் சீரியலை நிறுத்த சொல்லி கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதாவது இந்த சீரியலை பார்த்துவிட்டு பல மனைவிகள் தன்னை ஜனனியாகவும் கணவர்களை குணசேகரன் ஆகவும் நினைத்துக் கொண்டுநடந்து கொள்வதாக கூறிவரும் நிலையில் தொடர்ந்து பெண்களை ஊக்குப்படுத்தும் வகையில் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலினை கோலங்கள் சீரியல் இயக்கிய திருச்செல்வம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஆதிரைக்கு கரிகாலன வலுக்கட்டாயமாக குணசேகரன் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். எனவே இதனை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷலாக மாப்பிள்ளை விருந்து நடைபெற இருக்கிறது.

இதனை அடுத்து தற்பொழுது இந்த சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலக இருக்கிறாராம். அது வேறு யாருமில்லை எஸ்.கே.ஆரின் கடைசி தம்பியாக ஆதிரைக்கு ஜோடியாக நடித்து வந்த அருண் தான் மது கார்த்திக் என்பவர். அருண் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் தன்னுடைய கதாபாத்திரம் சொல்லும் அளவிற்கு இல்லை என்பதால் இந்த சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்திருக்கிறாராம் எனவே இதற்கு மேல் புதிய நடிகர் அருண் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.