சிம்புவை தூக்கி நிறுத்தினாறா சுசீந்தரன்.! ஈஸ்வரன் திரைவிமர்சனம்.!

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது சிறிது இடைவெளியில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது ரசிகர்களிடம் ஈஸ்வரன் வெற்றி பெற்றதா என்பதை பார்க்கலாம்.

ஈஸ்வரன் கதை

ஈஸ்வரன் படத்தில் பாரதிராஜா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது குடும்பத்தோடு மிகவும் அமைதியாக வாழ்ந்து வருகிறார். பாரதிராஜா இந்த திரைப்படத்தில் பெரியசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாரதிராஜா தன்னுடைய குடும்பத்தை சில காரணங்களால் அழிக்கத் துடிக்கும் எதிரியை கண்டு அஞ்சுகிறார், படத்தில் பாரதிராஜாவின் மகன் தான் சிம்பு. பல வழிகளில் எதிரிகள் பாரதிராஜாவின் குடும்பத்தை அழிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் அவர்களிடமிருந்து தன்னுடைய குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் எப்படி காப்பாற்றுகிறார் சிம்பு என்பதுதான் படத்தின் கதை.

eswaran-movie

படத்தை பற்றிய அலசல்

படத்தில் சிம்பு வழக்கம் போல் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு மூலம்  படம் முழுவதும் ஸ்கோர் செய்து விடுகிறார். அதேபோல் பாரதிராஜாவை பற்றி சொல்லவே வேண்டாம் தன்னுடைய எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது  அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார்.

அதேபோல் நிதி அகர்வால் பக்கா கிராமத்து பெண்ணாக அழகில் பட்டையைக் கிளப்பிய தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நந்திதா ஸ்வேதாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அருமையாக நடித்து உள்ளார்கள், படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் பின்னணி இசைதான். தமன் தன்னுடைய இசையால் படத்திற்கு ஸ்கோர் செய்துள்ளார் ஒவ்வொரு பாடலும் ரசிக்கும்படி அமைந்தது.

eswaran movie teaser

திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது என்று கூறலாம் அதேபோல் ஆண்டனி எடிட்டிங் செயலை மிகவும் அற்புதமாக செய்துள்ளார், படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் மீதி எல்லாம் வெட்டி எறிந்து விட்டார்.

இயக்குனர் சுசீந்தரன் ஒவ்வொரு நடிகர்களின் முழு நடிப்பையும் திறமையை வெளிக்கொண்டு வந்து ஈஸ்வரன் திரைப்படத்தை அருமையாக படமாக கொடுத்துள்ளார் இது முழுக்க முழுக்க குடும்பங்களுடன் பார்க்கக்கூடிய திரைப் படமாக அமைந்துள்ளது.

ஈஸ்வரன் காக்கவந்த சிவன்.

Leave a Comment

Exit mobile version